Mr.Zoo Keeper: யுவன் இசை, நிஜப் புலியுடன் பிலிப்பைன்ஸில் டிரெய்னிங் - புகழ் எடுக்கும் ஹீரோ அவதாரம்!

0

விஜய் டிவி 'குக் வித் கோமாளி'யில் ஸ்கோர் செய்து வரும் புகழ், பெரிய திரையிலும் நடித்து வருகிறார். 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' படங்களைத் தொடர்ந்து 'காசேதான் கடவுளடா', 'யானை', 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கதாநாயகனாக 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் கமிட் ஆகியிருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

மிருகக்காட்சி சாலை ஒன்றில் வேலை செய்பவராக புகழ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 20ம் தேதி ஊட்டியில் தொடங்கி, நடந்து வருகிறது. இந்த ஷெட்யூலைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் படமாக்க இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் விலங்குகள் பயன்படுத்துவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதால், படக்குழு வெளிநாடு பறக்கிறது. பிலிப்பைன்ஸில் உள்ள நிஜ புலியுடன் புகழ் நடிக்கும் காட்சிகள் இருப்பதால் அந்தப் புலியுடன் பத்து நாள்கள் பயிற்சி எடுக்க உள்ளார் புகழ்.

Mr.Zoo Keeper

மாதவன் நடித்த 'என்னவளே', 'ஜூனியர் சீனியர்' படங்களை இயக்கிய ஜே.சுரேஷ் இயக்கும் இப்படத்தில் 'சைக்கோ' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தன்வீரும் பணியாற்றுகிறார். படத்தில் புகழுக்கு ஜோடியும் உண்டு. 'வால்டர்', 'டிக்கிலோனா' படங்களின் நாயகி, ஷிரின் காஞ்சனவாலா நடிக்கிறார்.

ஊட்டியில் உள்ள அடர்ந்த காடுகளில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் முதல் வாரம் வரை இந்த முதல் ஷெட்யூல் ஷூட் நடக்க உள்ளதாம்.



from தமிழ் சினிமா https://ift.tt/B8sfGQ7
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*