கோவை மாவட்டம், நீலம்பூர் பிரபல நட்சத்திர விடுதி அருகே, ஓர் காதல் ஜோடி காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மப்டியில் வந்த இரண்டு போலீஸ்கார்கள், காதல் ஜோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம், ``ரூ.1 லட்சம் ரூபாய் பணம் வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால் காரில் பாலியல் தொழில் செய்வததாக கைது செய்வோம்.” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
பயந்து போன காதல் ஜோடி, ரூ.10,000 கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சூலூர் போலீஸார், தனிப்படை அமைத்து காதல் ஜோடியிடம் பணம் பறித்தவர்கள் குறித்து விசாரித்தனர்.
தொடர் விசாரணையில் அது கருமத்தம்பட்டி காவல் நிலையம் முதல் நிலைக் காவலர் ராஜராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் என்று தெரியவந்தது.
தொடர் விசாரணையில் இவர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே, கண்களில் சிக்கும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த இரண்டு பேர் மீதும், வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/dqtx2Pz
via
