கோவை: கொரோனாவில் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.8 லட்சம் திருட்டு - 2 பேர் கைது

0

கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் என்கிற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த யசோதா என்கிற பெண்,

கோவை

கடந்தாண்டு மே மாதம் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி யசோதா உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், யசோதாவின் கணவர் முருகசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, யசோதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு மூலம்,

கொரோனா மரணம்

கடந்த மே மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.8.5 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து, முருகசாமி பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது, மருத்துவமனையில் பணியாற்றிய அசாம் மாநில துப்புறவு தொழிலாளிகள் ராஜ்பங் சிங் (31), அதுல் ஜகோகை (55) ஆகியோர் ஏ.டி.எம் கார்டை திருடி கடந்த ஓராண்டாக பணம் எடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

ராஜ்பங் சிங்
அதுல் ஜகோகை

ஏ.டி.எம் கார்ட்டின் பின்புறம் யசோதா பின் நம்பரையும் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pIZfRqo
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*