ஆணுறை விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகை - குவியும் கண்டனங்கள் - தமிழ்நாடு

0

 


ஆணுறை விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகை - குவியும் கண்டனங்கள் - தமிழ்நாடு

2 நாட்கள் முன்

நடிகை நிதி அகர்வால் நடித்துள்ள விளம்பர வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் கடும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. 

பொதுவாக திரையுலகை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் என பலரும் திரைப்படங்களை தவிர்த்து விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாத்தித்து வருகின்றனர். சில சமயங்களில் இத்தகைய விளம்பரங்கள் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்த தவறுவதில்லை. 

சமீபத்தில் கூட முன்னணி நடிகைகளான ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தன. அந்த வகையில்  தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலும் சர்ச்சை வளையத்தில் சிக்கியுள்ளார். 

அவர் முன்னணி நிறுவனத்தின் ஆணுறையை விளம்பரப்படுத்தி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்வது என சரமாரியாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

நிதி அகர்வால் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதளப்பக்கத்தில் மதுபாட்டிலை திறந்து கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும்,  அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று கூறுவது போன்றும் நடித்து கடும் எதிர்ப்புகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*