கோவை செல்வபுரம் அடுத்துள்ள சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சம்பத் டிவியில் அதிகமாக சத்தம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் சம்பத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பிறகு சம்பத்திடம், டி.வியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றியுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து சம்பத் முகத்தில் வீசியுள்ளார். இதை முற்றிலும் எதிர்பார்க்காத சம்பத், கீழே விழுந்தார்.
சம்பத்தின் முகம், வாய் மற்றும் கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சம்பத் செல்வபுரம் காவல்துறையில் புகாரளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/7j0u5ow
via
