வெற்றிமாறன் - லாரன்ஸ் படம் எப்போது தொடங்குகிறது?

0

`காஞ்சனா 3' படத்திற்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ், 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனின் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்' படங்களின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் லாரன்ஸ் தவிர சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் நடித்துள்ளனர்.

'ருத்ரன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து கதிரேசன், மீண்டும் லாரன்ஸுடன் 'அதிகாரம்' படத்திற்காக கைகோக்கிறார். இம்முறை அவர் இயக்கவில்லை. துரை.செந்தில்குமார் இயக்குகிறார். 'அதிகாரம்' படத்திற்கான கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இது தோட்டாக்கள் சீறிப்பாயும் ஆக்‌ஷன் த்ரில்லர் என்கிறது படக்குழு. படத்திற்கான வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. இயக்குநர் துரை.செந்தில்குமார் இதற்கு முன் 'எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை' 'கொடி', 'பட்டாஸ்' ஆகிய படங்களை இயக்கியவர்.

லாரன்ஸ்- வெற்றிமாறன்

இப்போது அவர் இயக்க உள்ள லாரன்ஸின் 'அதிகாரம்' படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூனில் வெளியானது. அதன்பிறகு கொரோனா பரவல், லாக்டவுன்களினால் 'ருத்ரன்' படப்பிடிப்பு தள்ளிப்போகவே, இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் இருந்தனர். இப்போது 'ருத்ரன்' போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 'அதிகாரம்' படத்தின் படப்பிடிப்பை ஜூனில் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தை முடித்துவிட்டே லாரன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்கு செல்லவிருக்கிறார்.



from தமிழ் சினிமா https://ift.tt/cIj15TW
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*