கோவை 20-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மரியராஜ். கணபதி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் வீடுகளைவிட தொழில் நிறுவனங்கள் அதிகம். இதனிடையே, தி.மு.க கவுன்சிலரான மரியராஜ் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அதிகளவு குப்பைகளை கொட்டி வந்ததாகவும்,
அதுகுறித்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. அது விவதாமாக மாறி, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு இளைஞர் கவுன்சிலரை தாக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மரியராஜ் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து மரியராஜ் கூறுகையில், ``அது எங்கள் பகுதிதான். கடந்த ஒரு மாதமாக அதை சுத்தப்படுத்தி பராமரித்து வந்தோம். ‘ஏன் குப்பைப் போடுகிறீர்கள்.’ என்று கேட்டபோது, ‘குப்பை எடுக்கத்தானே கவுன்சிலர் இருக்கீங்க?’ எனக் கூறினார்.
‘உங்களிடம் பேசி பயனில்லை. உங்கள் ஓனரிடம் பேசிக்கொள்கிறேன்.’ என்றபோது வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாங்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தோம். உடனடியாக அவர்களை கைது செய்தனர்.
குடிபோதையில் இருந்த இவர்களை ஓனர் வந்து அடித்துவிட்டார். சரி மேற்கொண்டு பிரச்னை வரவேண்டாம் என்பதால் ஸ்டேசன் பெயிலில் வெளியில் விட்டுவிட்டார்" என்றார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாரிடம் கேட்டபோது, ``பிரச்னை நடந்தது உண்மைதான். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர்.” என்றனர். கவுன்சிலரிடம் பிரச்னை செய்தவரின் உரிமையாளர், தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவருக்குப் பழக்கமானவராம். இதனால் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/lCfoE5r
via
