கோவை ரேஷன் கடையில், முதல்வர் ஸ்டாலின் படம் அருகே பிரதமர் மோடி படத்தை மாட்டிய அண்ணாமலை!

0

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவை வந்திருந்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீஸ்ட் படம், இந்தி, தமிழ், முதல்வர், திராவிடம் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார்.

அண்ணாமலை

இதையடுத்து, அவர் அவிநாசி சாலை கோல்டுவின்ஸ், துரைசாமி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார்.

மத்திய அரசு வழங்கி வரும் இலவச அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்வதற்காக அண்ணாமலை அங்கு சென்றதாக கூறப்பட்டது. இதற்காக அந்த ரேஷன் கடை அருகே தடபுடல் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

ஸ்டாலின் படம் அருகே மோடி படம்

ரேஷன் கடைக்கு உள்ளே சென்ற அண்ணாமலை, முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டினார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில், பாஜக கவுன்சிலர் மோடியின் படத்தை மாட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு,

கோவை ரேஷன் கடை

கோவை மாவட்டம் பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர்கள் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். அப்போது அரசு ஊழியர்களை பாஜகவினர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Cy0z4DR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*