`அதைப்பற்றி ஓ.பி.எஸ் கவலைப்பட வேண்டாம்' - மா. சுப்பிரமணியன்

0

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தார். கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் 100 சதவிகிதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.

மா. சுப்ரமணியம்

மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதைப்பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கவலைப்பட வேண்டாம்.

தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவில் இப்போதும் 7 வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளன. மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது.

மா. சுப்ரமணியம்

பிற நாடுகள், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்படவில்லை. மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டது. குழு அமைத்து அதை ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் 355 ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என மத்திய அரசு தான் அறிவித்துள்ளது. முன்களப் பணியாளர்கள் நீங்கலாக, பிறருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/y2PBCx5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*