கோவை: பிரபல ஆனந்தாஸ் உணவகம் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

0

கோவை மாநகரில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகம் இயங்கி வருகிறது. வடவள்ளி, அவிநாசி சாலை, சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த உணவுகத்துக்கு கிளைகள் உள்ளன. இந்நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

வருமானவரித்துறை சோதனை..!

அதனடிப்படையில், இன்று காலை முதல் அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆனந்தாஸ் உணவகம், ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ், அலுவலகம், நிறுவனத்தின் இயக்குநர்கள், உறவினர்கள் வீடுகள் என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனந்தாஸ் உணவகம்

முன்னதாக வடவள்ளி பகுதியில் உள்ள கிளையில் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது உணவக ஊழியர்கள், அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் மறுத்ததாக சொல்லப்படுகிறது, இதனால் உணவகம் தரப்பில் இருந்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டது. போலீஸார் அங்கு விரைந்ததும், அது வருமானவரித்துறை அதிகாரிகள் தான் என்று உறுதி செய்யப்பட்டது.

ஆனந்தாஸ் உணவகம்

வருமானவரித்துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் ஆனந்தாஸ் உணவகங்கள் காலை முதல் பரபரப்பாக காணப்படுகின்றன. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/HJ1acIj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*