நாமக்கல்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்

0

நாமக்கல்லைச் சேர்ந்த கணவனை இழந்தப் பெண் ஒருவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கும், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த பெண் ஆண் நண்பருடன் நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அந்த பகுதிக்கு இருந்த 4 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணையும், அவரின் நண்பரையும் மிரட்டி, அந்த பெண் அணிந்திருந்த ஒரு பவுன் செயின் மற்றும் 2 ஆயிரம் பணத்தை பறித்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அவர்களை விடாத அந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கியதோடு, மோட்டார் சைக்கிளில் அமர வைத்து, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பயனற்று இருந்த கட்டடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், அந்த கட்டடத்தில் வைத்து அப்பெண்ணை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதை தடுக்க வந்த அந்த பெண்ணின் ஆண் நண்பரை தாக்கியதாகச் சொல்கிறார்கள். மேலும், அதை அந்தப் பெண்ணின் ஆண் நண்பருடைய செல்போனை பறித்து 4 பேர் கும்பல் வீடியோ பதிவு செய்ததாகவும் தெரிகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி கூகுள் பே மூலம் எட்டாயிரம் ரூபாய் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

அதன்பிறகு, இருவரையும் அந்த கும்பல், `இங்கே நடந்ததை வெளியே சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம்’ என மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் நாமக்கல் அழகு நகரை சேர்ந்த நவீன்குமார், வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார், அவர்களுக்கு உதவிய பெயின்டர் முரளி, வல்லரசு ஆகியோர் அடங்கிய கும்பல்தான், பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீஸார் நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள வல்லரசை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/64GaxuY
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*