தூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - தாய், கர்ப்பிணி மகளுக்கு நேர்ந்த சோகம்

0

தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரின் மனைவி காளியம்மாள். இவர்களது ஒரே மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா. காத்தம்மாளுக்கும் கார்த்திகாவுக்கும் மார்த்தாண்டம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காத்தம்மாள் தற்போது 7 மாத கர்ப்பிணி என்பதால், கடந்த வாரம் வளைகாப்பு நடத்தி அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வீட்டின் மேற்கூரை மிகவும் பழுதடைந்ததால் தெர்மோகோல் சீலிங் அமைத்துள்ளனர்.

உயிரிழந்த காளியம்மாள், காத்தம்மாள்

இதனால், கூரை மேலும் மோசமானதை வீட்டில் உள்ளவர்கள் கவனிக்கவில்லை. சீலிங்கில் மேற்கூரை கான்கிரீட் உதிர்ந்து விழுந்ததை எலி ஒடுவதாக நினைத்துள்ளனர். முத்துராமன், தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கட்டணக் கழிப்பறைகளில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த வேலைக்குச் செல்வதற்காக தினமும் வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு அவர் எழுந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீடு திடீரென கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கிய காளியம்மாள் மற்றும் கர்ப்பிணியான காத்தம்மாள் என்ற கார்த்திகா இருவரும் உயிரிழந்தனர். முத்துராமன் மீது கட்டைகள் விழுந்ததால்அவர் மயக்கமடைந்துள்ளார். அதிகாலையில் வேலைக்கு செல்ல எழுந்து வரும் முத்துராமன் வராதாதல் உள்ளே சென்று பார்த்த அவரின் தாயார் வீடு இடிந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டுட்டுள்ளார்.

இடிந்து விழுந்த மேற்கூரை

அவரின்அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினரிடம் கூடினர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தாய், மகளின் உடல்களையும் மீட்டனர். காயமடைந்த முத்துராமன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், கர்ப்பிணி மகள் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/exXq05D
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*