``கோவை மக்களை புறக்கணித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" - வேலுமணி காட்டம்

0

கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறாடாவுமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி,

வேலுமணி

“இஸ்லாமியர்களுக்கு நோன்பு காலத்தில் தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்து வந்தது. ஹஜ் பயணத்துக்கான தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தி கொடுத்தோம். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் சாலைகள் மேம்பாடு தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. திமுக அரசு அதை ரத்து செய்துள்ளது. சாலைகள் சீரமைக்கும் பணியை செய்யவில்லை.

வேலுமணி

குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. கோவை மக்களை புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி பணியை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு செயல்படாத நிர்வாகமாக கோவை மாநகராட்சி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் பாலியல் வழக்குகள் அதிகரித்துள்ளது.

கோவை மாநகராட்சி

மக்களுக்கு பாதுகாப்பு தரும் அரசாக திமுக மாற வேண்டும். விளம்பரத்தில் தான் தற்போதைய அரசு ஒடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. இனியாவது செய்ய வேண்டும்.” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/QLSjGTv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*