"போய் உங்க குடும்பத்தைப் பாருங்க!"- பரவிய வதந்தியால் கடுப்பான சமந்தா; வைரல் பதிவு!

0

விவாகரத்துக்குப் பிறகு பெரும்பாலும் சமந்தா தனது கடந்தகால வாழ்க்கைக் குறித்து பேசுவதைத் தவிர்த்து வந்தார். சமந்தா - நாக சைதன்யா இருவரும் பரஸ்பரம் பிரியவிருக்கும் முடிவை தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் உலவின. அப்படியான வதந்தி ஒன்றுக்கு சமந்தா தற்போது காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சமந்தாதான் இருவரின் விவாகரத்துக்குக் காரணம் எனவும், நாக சைதன்யா இப்போது வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாகப் பரவும் வதந்திக்கு சமந்தாவின் பி.ஆர். டீம்தான் காரணம் எனவும் எழுதப்பட்டிருக்கும் செய்தி ஒன்றின் லிங்கைப் பகிர்ந்து 'போய் பிள்ளை குட்டியைப் படிக்க வைங்க' என்கிற ரீதியில் அவர் அளித்திருக்கிற பதில் இதோ.

அதில், "பெண்கள் மீதான வதந்திகள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஆண்கள் மீதான வதந்திகள் என்றால் அது பெண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். வளருங்க (மெச்சூர்ட்) மக்களே. சம்பந்தப்பட்டவர்களே இதனைக் கடந்து சென்றுவிட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். கடந்து போங்கள்!" எனப் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த ட்வீட்டுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். சமந்தாவின் நடிப்பில் தமிழில் சமீபத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெளியானது. அவர் தற்போது 'சாகுந்தலம்', 'யசோதா' மற்றும் பாலிவுட் தொடர் என பிஸியாக நடித்து வருகிறார்.



from தமிழ் சினிமா https://ift.tt/ybAvaUt
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*