"வாங்கோ வாங்கோ ஒன்னாகி" - அறிவுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன்!

0

கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இப்பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் அவரின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் அறிவு இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்" என்றும் "உண்மைதான் எப்போதும் வெல்லும்' என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "வாங்கோ வாங்கோ ஒன்னாகி" என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "என்ஜாயி என்ஜாமி" பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

"நான் இப்போது வேறு மொழியில் indie இசையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதில்தான் என் முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிடுகிறேன்.

என்ஜாயி என்ஜாமி பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் பண்ண வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் "என்ஜாய் என்ஜாமி" பாடலை கம்போஸ், ப்ரோக்ராம் மற்றும் ரெகார்டிங் செய்து, இணைந்து பாடினேன். " என்பதாக ஒரு நீண்ட பதிவிட்டிருந்தார்.



from தமிழ் சினிமா https://ift.tt/KnR4sHb
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*