கரூர்: காவல்நிலையத்தில் இருந்தே தப்பியோடிய பிக்பாக்கெட் திருடன் - சுற்றி வளைத்த போலீஸார்!

0

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் கிராமத்தில், பிரபல பிக்பாக்கெட் திருடனான கொடியரசு, தனது கைவரிசையை காட்ட முற்பட்டுள்ளான். இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து, கட்டி வைத்துள்ளனர். அதோடு, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுத்துள்ளனர். இந்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்ததோடு, நள்ளிரவில் கொடியரசை அழைத்து வந்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர். தொடர்ந்து காலையில் காவல் நிலையத்தில் ஒரு சில போலீஸார் மட்டுமே இருந்த நிலையில், அவனுக்கு டிபன் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர்.

கரூர்

அப்போது, சாப்பிட்ட இலையை தூக்கி போட்டு விட்டு கை கழுவுவதாக கூறிச் சென்ற போது, அந்த பிக்பாக்கெட் திருடனுடன் ஒரு பெண் போலீஸாரும் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் போலீஸாரை தள்ளி விட்டு கொடியரசு தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, உஷாரான போலீஸார் அனைவருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்து அப்பகுதியை சுற்றி வளைத்து தேட ஆரம்பித்தனர். அப்போது, அமராவதி ஆற்றங்கரையில் முள் காட்டிற்குள் பதுங்கி இருந்த பிக் பாக்கெட் திருடனை போலீஸார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/b6nBrh3
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*