மாணவிகளிடம் அத்துமீறிய வழக்கில் போக்ஸோ சட்டத்தில் சிறை - ஜாமீனில் வெளிவந்த தலைமை ஆசிரியர் தற்கொலை

0

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகேயுள்ள சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். வயது 55. இவர், மேல்தாங்கல் கிராமத்திலிருக்கும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம், மாணவிகளிடம் காளியப்பன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆறுமுகம் என்பவர் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் உண்மைத்தன்மை அறிந்து, ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியர் காளியப்பனை போலீஸார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். சிறையிலிருந்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார்.

சிறை

சிறை வாழ்க்கை மற்றும் தன் தவறால் சமூகத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் குறித்து மனமுடைந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. வெளியிலும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். வழக்கு விசாரணைக்காக மட்டும் அடிக்கடி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்த நிலையில், வீட்டு மேல்மாடி அறையில் தூக்குப்போட்டு காளியப்பன் உயிரை மாய்த்து கொண்டார். இது குறித்து, அவர் மனைவி, கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/AbhzgST
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*