புதுக்கோட்டை: குட்கா வழக்கில் கைதான நபர் சிறையில் மரணம் - கதறும் உறவினர்கள்; நடந்தது என்ன?

0

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே காரையூரைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக காரையூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவரிடம் சுமார் 50 கிலோ அளவிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இறந்தவரின் உறவினர்

சிறையில் இருந்த சின்னதுரைக்கு கடந்த 21-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, சிறைத்துறை அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சின்னத்துரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீஸாரின் அலட்சியத்தால் தான் சின்னதுரை உயிரிழந்திருக்கிறார். அவர் உயிரிழிப்பிற்கான உண்மைக் காரணம் தெரியாமல் அவரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரின் மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நீதிபதி மற்றும் போலீஸார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சின்னதுரையின் உடலை வாங்கிச் சென்றனர்.

இறந்தவரின் உறவினர்

இதுகுறித்து சின்னதுரையின் உறவினர்களிடம் கேட்டபோது, "சின்னதுரைக்கு இருத நோய் பிரச்னை இருந்தது, கடந்த மாதம் தான், ஆஞ்சியோ செஞ்சாங்க. ரொம்ப சீரியசா இருந்து தான் தேறி வந்தாரு. அவசர, அவசரமா அவரை கைது செஞ்சிட்டாங்க. தினமும் மருந்து மாத்திரைகளை கட்டாயம் எடுக்கணும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அவங்க எழுதிக்கொடுத்த மாத்திரை, மருந்துகளைக் கொடுத்து அனுப்ப போலீஸார் விடலை. அவருக்கு உடல் நலக்கோளாறு இருப்பது தெரிந்தும்,கைது செய்த போலீஸார், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்ததால் தான் அவர் உயிர் இழந்திருக்கிறார். உரிய விசாரணை நடத்தனும்" என்றனர்.

இறந்தவரின் உறவினர்கள்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, ஜெயந்தி பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு சென்று உயிரிழந்த சின்னதுரையின் உடலை பார்வையிட்டதோடு அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் நடந்த விவரம் குறித்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்துவதற்கு சின்னதுரையின் உறவினர்கள் அனுமதி அளித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையிலேயே, காரையூர் காவல்துறையினர், சம்பவத்தன்று அவரின் உடல் நிலையை பரிசோததித்த அரசு மருத்துவர், சிறை காவலுக்கு அனுப்பிய இலுப்பூர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரிடம் நீதிபதி ஜெயந்தி விசாரணை மேற்கொண்டு அதன் பின்பு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/LbMchv6
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*