பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையைத் தாக்கிய போதை ஆசாமி! - போலீஸ் விசாரணை

0

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மாருதி நகரில் வசித்து வருபவர் ஆசிரியை சித்ராதேவி. ஆலங்குடி அருகே, கன்னியான்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போல் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென வகுப்புறைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை சித்ராதேவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் அந்த போதை ஆசாமி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்ததோடு அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள், பொதுமக்கள் உதவியுடன் அந்த போதை ஆசாமியை பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேற்றினர்.

போதை ஆசாமி

இது தொடர்பாக ஆசிரியை சித்ராதேவி அளித்தப் புகாரின் பேரில், வடகாடு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். விசாரணையில், போதை ஆசாமி வானக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, ``ஆசிரியை சித்ராதேவிக்கு வானக்கன்காடுதான் சொந்த ஊர். அதே ஊரைச் சேர்ந்தவர்தான் சித்திரைவேல். இவர்களுக்கு இடையே நீண்ட நாள்களாக இடப் பிரச்னை இருந்திருக்கிறது. இது தொடர்பாக அடிக்கடி இவர்களுக்குள் பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், இடப் பிரச்னை தொடர்பாக கோபமடைந்த சித்திரைவேல், மது குடித்துவிட்டு திடீரென பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையைத் தாக்க முற்பட்டிருக்கிறார். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/XOhDHWj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*