தலைமையிடம் இருந்து அழைப்பு... முதல்வரிடம் கண்ணீர் விட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி!

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் பதவியில் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கோவை வந்தபோது, பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் கூட்டம் நடந்தது.

முதல்வர் கலந்து கொண்ட கூட்டம்

இதில் திப்பம்பட்டி ஆறுச்சாமியும் கலந்து கொண்டார். மாநில நிர்வாகியாக இருந்தும் அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

மேலும், “சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை ஊட்டிய திமுகவிலேயே, அது கிடைக்கவில்லை என்றால் எங்கு போக முடியும்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், திமுக தலைமை அவரை சென்னைக்கு அழைத்துள்ளது. அங்கு ஸ்டாலின் மற்றும் அன்பகம் கலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசியிருக்கிறார் ஆறுச்சாமி.

திப்பம்பட்டி ஆறுச்சாமி

``உங்களது வருத்தத்தை எங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான இயக்கம். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்.” என கூறியுள்ளனர்.

ஸ்டாலினை கண்டவுடன் ஆறுச்சாமிக்கு கண்ணீர் விட்டுள்ளார். ஸ்டாலின், “என்ன ஆச்சு?” என்று கேட்டுள்ளார். உடனே ஆறுச்சாமி நடந்ததை கூறியுள்ளார். ``நான் உங்களை அங்க பார்த்தனே. சரி விடுங்க பார்த்துக்கலாம்.” என ஆறுச்சாமியின் தோளில் தட்டி ஆறுதல் சொல்லியுள்ளாராம் ஸ்டாலின். மேலும், அவரின் பதவி விலகல் கடிதத்தையும் தலைமை ஏற்க மறுத்துவிட்டது.

ஸ்டாலின்

இதனால் ஆறுச்சாமி நெகிழ்ந்துள்ளார். இதனிடையே, “இந்த விவகாரத்தை கையில் எடுக்க பாஜக முயற்சி செய்தது. அதற்குள் அலெர்டாகி திமுக தலைமை அதற்கு செக் வைத்துவிட்டது.” என உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/xYPIyGv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*