கோலிவுட் ஸ்பைடர்: சூர்யா 42 வின் லேட்டஸ்ட் அப்டேட்; புஷ்பா -2 வில் இணையும் பாலிவுட் நடிகை!

0

கோலிவுட் ஸ்பைடர்:

`நானே வருவேன்' படத்தை அண்ணனும் தம்பி தனுஷும் சேர்ந்து தான் எழுதினார்கள். அண்ணன் கவனிக்காது போன இடங்களை தம்பியும், தம்பி மறந்ததை அண்ணனும் நிறைவு செய்திருக்கின்றனர். சமீபத்தில் செல்வராகவன் நடிப்பதற்கும் டைரக்டர் செய்வதற்கும் இடையில் நின்று தவிப்பதால் படம் ஷுட்டிங் நடக்கும் போது செல்வராகவன் தடுமாற படத்தை 'திருச்சிற்றம்பலம்' போல தனுஷ் நாளடைவில் டைரக்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்.

'நானே வருவேன்' ஸ்பாட்டில்..

பொறுத்துப் பொறுத்து பார்த்த டைரக்டர், தம்பியிடம் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே சண்டை போட்டிருக்கிறார். உடன் இருந்தவர்கள் இதை மதிய உணவு இடைவேளையை அறிவித்து சரி செய்திருக்கிறார்கள். மறுபடியும் அண்ணன் டைரக்ட் செய்ய படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தனுஷின் எல்லா படங்களிலும் அவர் டைரக்ட் செய்வது தொடர்ந்து நடப்பதுதான். அண்ணன் என்பதால் ஈகோ தாங்காமல் வெடித்து விட்டார் என படப்பிடிப்பிலிருந்தவர்கள் சொல்கிறார்கள்.

* பிரசாந்த் அப்பா தியாகராஜனிடம் வெற்றியடைந்த தெலுங்கு, ஹிந்தி படங்கள், வேற்று மொழிப்பட உரிமைகள் நிறைய இருக்கின்றன. கிட்டத்தட்ட 25 படங்களின் உரிமையை தயாரிக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறார். மும்பைக்கு பிளைட் ஏறி விசாரித்தால் அத்தனை இந்திப் பட தயாரிப்பாளர்களும் தியாகராஜனை சுட்டிக்காட்டுகிறார்கள். அவரைத் தேடி வந்தால் என் பையன் பிரசாந்தை கதாநாயகனாக நடிக்க வைய்யுங்கள் என கைகாட்டி விடுகிறார். சம்பளத்தையும் குறைப்பதாகச் சொல்கிறார். ஆனாலும் திரும்பி விடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். இதற்கு என்ன செய்யலாம் என பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் கூடி பேசப் போகிறார்களாம்.

மஞ்சிமா மோகன்

* மஞ்சிமா மோகனோடு, கௌதம் கார்த்திக் திருமணம் கிட்டதட்ட நிச்சயம் ஆகிவிட்டது. பெண் வீட்டில் மற்றும் மணமகன் வீட்டில் இருந்த எதிர்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து கல்யாணத்திற்கு கௌதம் கார்த்திக் ஓகே வாங்கி விட்டார். இதற்கு கெளதமிற்கு அவரின் அப்பா தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இன்னும் இந்த அறிவிப்புகள் இறுதிக்கட்டத்திற்கு வருகிற வரைக்கும் பதற்றத்தோடு காதல் ஜோடி காத்திருக்கின்றனர். காதல் ஜெயிக்கட்டும்.

* அட்லியின் `ஜவான்' படத்தில் விஜய் நடிப்பதாகச் சொல்லியிருந்தோம் அல்லவா! விஜய், பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுவாகவே தன் படங்களுக்கு சென்னையில் படப்பிடிப்பு நடக்க வேண்டும், பெப்சி தொழிலாளர்களையும் அதில் பங்கேற்க வைக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் நைட் ஷூட் வைக்கக் கூடாது உள்பட சில பாலிஸிகளை கடைபிடிக்கிறார். இப்போது அவர் நடித்து வரும் `வாரிசு' படப்பிடிப்பின் பெரும்பகுதி சென்னையில் தான் நடந்தது. இந்த சூழலில் அட்லிக்குக் கொடுத்த கால்ஷீட் தேதிகளில் சென்னையில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'ஜவான்' இந்தி, தமிழில் தயாராகி வருகிறது. விஜய்க்கு ஜோடி உண்டா? என்பது போகப்போகத்தான் தெரியவரும்.

ஜெயிலர் டீம்.

* 'ஜெயிலர்' படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நெல்சனின் வேகமும் ஒர்க்கிங் ஸ்டைலும், ரஜினியை கவர்ந்துவிட, 'எக்ஸலன்ட்' என அவரை பாராட்டி விடுகிறார் ரஜினி. தவிர படப்பிடிப்பு இடைவேளைகளில் நெல்சனிடம் ரஜினி மனம் விட்டு நிறைய பேசுவதாகவும் சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டாரின் இந்த ஃப்ரெண்ட்லி அப்ரோச்சால், செம உற்சாகத்தில் இருக்கிறார் நெல்சன்.

* இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் 'விடுதலை' படத்தின் ஷூட்டிங், நிறைவடையும் கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. டிசம்பருக்குள் 'விடுதலை' படப்பிடிப்புக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூரி. தவிர, 'மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாரன் இயக்கத்திலும் நடிக்கிறார். அவர் சொன்ன கதை சூரிக்கு மிகவும் பிடித்துப் போய்விட, டிசம்பரில் இருந்து கால்ஷீட் தருகிறேன் என சொல்லியிருக்கிறார் சூரி. அதைப் போல அமீர் இயக்கத்தில் சூரி நடிப்பதாக சொல்லப்பட்ட 'இறைவன் மிகப்பெரிவன்' படத்தில் சூரி இல்லையாம். இதற்கு அடுத்த படத்தில் தான் அமீர் - சூரி கூட்டணி இணைகிறதாம்.

சிவா, சூர்யா, டி.எஸ்.பி.

* சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ' சூர்யா 42' படத்தின் ஷூட்டிங் கோவாவில் பரபரப்பாக நடந்து வருகிறார். பீரியட் ஃபிலிமான இதில் 'சூர்யா- திஷா பதானி' காம்பினேஷன்களை அங்கு படமாக்கி வருகிறார்கள். அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு, மீண்டும் சென்னை வருகிறார்கள்.

* அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'வில் சமந்தா ஆடிய ''ஊ சொல்றியா மாமா' மாஸ் ஹிட் பாடல். அதைப் போல, இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா அதில் ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறார். 45 ப்ளஸ் வயதை நெருங்கும் மலைக்கா, இன்னமும் இளமை மிஸ் ஆகாமல், ஃபிட்னஸ் டால்பினாக உடம்பை வைத்திருப்பது பாலிவுட்டே வியக்கும் விஷயமாகும்!



from தமிழ் சினிமா https://ift.tt/k4pi9jE
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*