புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா. காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் எம்.எல்.ஏவான இவர், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பொதுமக்களுடன் நெருங்கி பழகும் இவர், சமீபத்தில் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுத்த சிறுவனிடம் “நான்தான் அமைச்சர் நம்புடா” என்று விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் குழந்தைகள் தினமான இன்று, பள்ளி சிறுவர்களிடம் பாடச் சொல்லி அவர் செல்லமாக கொஞ்சும் வீடியோவை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்திருக்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.
அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் பேசினோம். ”வழக்கமாக எனது தொகுதிக்கு செல்லும்போது பள்ளி விட்டு நடந்து செல்லும் மாணவர்களை எனது காரில் ஏற்றிச் செல்வேன். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அக்கா.. அக்கா.. என்றுதான் அன்போடு என்னிடம் பேசுவார்கள். அவர்கள் ‘பசங்க’ என்று ஒரு வீடியோவும் நடித்திருக்கிறார்கள். அந்த குழந்தைகள் நன்றாக கானா பாட்டு பாடுவார்கள். அதனால் அவர்களை பாடச் சொல்லிக் கேட்டேன்” என்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.
வீடியோவை காண லின்க்-ஐ க்ளிக் செய்யவும்...
from மாவட்ட செய்திகள் https://ift.tt/iTV41F3
via
