மதுவுக்கு அடிமையான மனைவி; கணவன் கண்டித்ததால் தற்கொலை - பரிதவிப்பில் 4 குழந்தைகள்!

0

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகிலிருக்கும் அமராபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் குப்பன், ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகந்திக்கு வயது 25. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தினமும் மாலை வேளையில், கணவனுடன் சேர்ந்து மனைவியும் மது குடித்து வந்திருக்கிறார். குழந்தைகளை சரியாகக் கவனித்துக்கொள்ள முடியாமல் போனதால், குடிப்பழக்கத்தை குறைத்துகொள்ளுமாறு மனைவியைக் கண்டித்திருக்கிறார் குப்பன். இதனால், இருவருக்கும் இடையே அவ்வபோது தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகந்தி தனது தாய் வீடு இருக்கும் களத்தூர் பகுதிக்கு கணவன் மற்றும் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார்.

ராணிப்பேட்டை

அங்கேயும் தினமும் மது குடிப்பதை சுகந்தி வழக்கமாகக் கொண்டிருந்ததால், அவரது தாயும் கண்டித்திருக்கிறார். இதனால், மனமுடைந்த சுகந்தி மதுவில் விஷம் (கொக்கு மருந்து) கலந்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தொடர் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தாயை இழந்த 4 குழந்தைகளும் பரிதவிக்கின்றன. இது தொடர்பாக, அவரது தாய் மல்லிகா அவளூர் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/MbwX24s
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*