நெல்லை: மதுபோதையில் சொக்கப்பனை தீக்குள் விழுந்த போதை ஆசாமி - அதிர்ச்சி சம்பவம்

0

தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதையொட்டி பல்வேறு கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டதுடன், கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர் வரையிலும் பனை ஓலைகளால் செய்யப்பட்ட தீப்பந்தங்களை ஏந்தியபடி உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாளையங்கோட்டையில் மது போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

மது போதை காரணமாக தீக்குள் விழுந்தவர்

பாளையங்கோட்டை சமாதானபுரம் அம்பேத்கர் காலனியில் உள்ள காளியம்மன் கோயிலில் கார்த்திகை திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அங்குள்ள மைதானத்தில் பனை ஓலைகளால் உயரமாக செய்யப்பட்டிருந்த பந்தத்தில் தீவைக்கப்பட்டது.

தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதும், சுற்றிலும் நின்றவர்கள் உற்சாகம் அடைந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மது போதையில் இருந்தார். அவர் திடீரென எரியும் தீக்குள் ஓடியதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உயரமாக எரிந்த தீக்குள் மது போதையில் ஓடிய அவரின் உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது.

கார்த்திகை தீபத் திருவிழா

தீயின் சூட்டைத் தாங்க முடியாத அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர் மீது எரிந்த தீயை அணைத்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மது போதை காரணமாக எரியும் தீக்குள் முருகன் ஓடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/BIYaT4t
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*