``இந்தியாவின் பெருமை பேசும் அண்ணாமலை, வெளிநாட்டு கைக்கடிகாரம் கட்டியிருப்பது ஏன்?" - துரை வைகோ

0

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த "மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம்  திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில்  திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நான் என்னை தலைவராக எண்ணவில்லை. கட்சி எனக்கு தலைமை கழகச் செயலாளர் என்ற பதவி கொடுத்துள்ளது. ஒட்டு மொத்த இளைஞர்களின் செயல்பாடு, சக்தியை வைத்துதான் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியுமே தவிர குறிப்பிட்ட தலைவரை வைத்து இல்லை.

துரை வைகோ

ம.தி.மு.கவை தலைவர் வைகோவின் பேச்சாற்றல், உழைப்பு, மக்கள் பணியால் 29 ஆண்டுகள் கட்சியை நடத்தினார்.  கடந்த 10 ஆண்டுகளாகத்தான் கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இழந்ததை மீட்க வேண்டும் என்றால் மக்கள் பணி செய்வது அவசியம். அந்தந்தப் பகுதியில் மக்கள் பணிகளைச் செய்தால் கட்சிக்கும், தலைவருக்கும் பெருமை.

விவசாயிகளை பாதிக்கும் பிரச்னைகளை நாம் கையில் எடுத்து போராடுவோம். 29 ஆண்டுகால நம் கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ளோம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மக்கள் பணியே சிறந்தது.  பா.ஜ.க.வின் தவறான சித்தாத்தங்களுக்கு எதிராக உள்ள அனைத்து இயக்கங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். 

துரை வைகோ

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியே உள்ளது. அண்ணாமலை,  ’மேக் இன் இந்தியா’, இந்திய பொருள்களை ஊக்குவிப்பது என்று கூறி விட்டு 5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாட்டு கைக்கடிகாரத்தைக் கட்டியிருப்பது குறித்து அவர்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.  



from மாவட்ட செய்திகள் https://ift.tt/4FwAaTK
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*