`தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்ட சப் கலெக்டர் பங்களா' - பத்திரப்பதிவு மோசடியால் அதிகாரி சஸ்பெண்ட்

0

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதேபோல வக்பு வாரியம், அரசு மற்றும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலைகளை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த சட்ட திருத்தத்திற்கு சார் பதிவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், கச்சிராப்பாளையத்தில் உள்ள ஒரு இடம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு நபர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த அந்த பத்திரப்பதிவில், இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

சஸ்பெண்ட்

அதனால் துணை ஆட்சியர் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம், சம்மந்தப்பட்ட இடத்தின் பட்டா மற்றும் பத்திரங்களை ஆய்வு செய்தார். அப்போது தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த இடம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சப்-கலெக்டர் பங்களா என தெரிய வந்தது. அதையடுத்து மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம், சென்னை பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில் சப் கலெக்டர் பங்களாவை மோசடியாக பதிவு செய்த சார் பதிவாளர் (பொறுப்பு) கதிரவனை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இந்த பத்திரப்பதிவு மோசடியில் மேலும் சில உயர் அதிகாரிகள் தொடர்பிருக்கலாம் என்றும், அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Kl3GXya
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*