
`உயிரை காப்பாத்துங்க சார்’ - காரை நிறுத்திய பெண் போலீஸ், அமைச்சரின் உருக்கமான பதிவு!
சிந்து ஆர்
அமைச்சர் ரோஸி அகஸ்டின்அமைச்சர் ரோஸி அகஸ்டின்
பெண்கள்
கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ரோஸி அகஸ்டின். இவர் அடூர் - பத்தனம்திட்டா சாலையில் போத்திராட் பகுதியில் பைலட் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் உதவி கேட்டு அமைச்சர் காரை வழிமறித்தார்.
காரில் இருந்து இறங்கிய அமைச்சரிடம், `அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த நபர் துடித்துக் கொண்டிருக்கிறார். உதவி கேட்டும் எந்த வாகனமும் நிற்கவில்லை. ஓர் உயிரை காப்பாற்றுங்கள் சார்’ என அந்தப் பெண் பதறி வேண்டினார். அமைச்சர் ரோஸி அகஸ்டினுக்கு பாதுகாப்புக்காக வந்த போலீஸ் வாகனம் மூலம், காயமடைந்தவர் அடூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. விபத்தில் சிக்கி இறந்தவர் பந்தளம் பகுதியைச் சேர்ந்த பென்னி (52) எனத் தெரியவந்தது.
விபத்து நடந்த பகுதியில் அமைச்சர்விபத்து நடந்த பகுதியில் அமைச்சர்
இந்நிலையில், அமைச்சர் ரோஸி அகஸ்டின் தனது முகநூல் பக்கத்தில் பெண் போலீஸின் புகைப்படம், விபத்து நடந்த பகுதியின் போட்டோவுடன் ஒரு பதிவையும் பகிர்ந்தார். அதில், `திருவனந்தபுரம் செல்வதற்காக இரவு 9 மணியளவில் அடூர் - பத்தனம்திட்டா சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது இளம்பெண் ஒருவர் இரண்டு கைகளையும் வேகமாக வீசியவாறு சாலையில் சென்ற எனது வாகனத்தை நிறுத்தினார். ஒருவர் விபத்தில் சிக்கி பத்து நிமிடங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரே மூச்சில் கூறினார்.
