
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டுவரும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தில், கடந்த 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பணத்தை கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில், சத்துவாச்சாரி பகுதியிலுள்ள ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர்த்தியின் பங்களா வீட்டில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இரண்டாம் கட்ட சோதனையை தொடங்கியிருக்கிறார்கள்.
கூடுதல் ஆட்சியர் பதவி அந்தஸ்தில் உள்ள திட்ட இயக்குநர் ஆர்த்தியிடமும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தருமபுரி அருகே நார்த்தம்பட்டி பகுதியிலுள்ள ஆர்த்தியின் கணவர் வீடு மற்றும் திருச்சியிலுள்ள ஆர்த்தியின் இன்னொரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கதவை உள்பக்கமாகப் பூட்டி, சோதனை நடத்தி வருகிறார்கள். கிராம ஊராட்சிகளின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கைச் செய்து அனுமதியளிப்பதில், லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்த நிலையில், விஜிலென்ஸ் ரேடாரில் திட்ட இயக்குநர் ஆர்த்தி சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
from விகடன்
umn news
