Tamil News today live: `தஹி' சர்ச்சை; "நம் பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை" - அண்ணாமலை எதிர்ப்பு

0

``செப்டம்பர் 17-ம் தேதி `வைக்கம் விருது' வழங்கப்படும்'' - மு.க ஸ்டாலின்

பெரியார்

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ``எல்லை கடந்து சென்று வைக்கத்தில் பெரியார் போராடியதை நினைவு கூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள், நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் `வைக்கம் விருது' சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ம் நாள் அன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில், ஓராண்டு முழுவதும் நடைபெறும். வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த அண்ணாமலை எதிர்ப்பு

அண்ணாமலை

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், `` பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த நிலையில் தயிர் பாக்கெட்டுகளில் `தஹி' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு, நம் பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. அதனால் உடனடியாக அதை திரும்ப பெற வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*