
'ராஜ்பவன் முற்றுகை...' - ஆளுநருக்கு எதிராக வரிந்துகட்டும் திமுக கூட்டணி!
ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவும், பல மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதை நியாயப்படுத்தியும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருப்பது அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 'இவ்வாறு நடந்துகொள்வது ஆளுநருக்கு அழகல்ல, தன்னை ஒரு `தி கிரேட் டிக்டேட்டராக' அவர் நினைத்துக்கொள்ள வேண்டாம்' எனக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜ்பவன் முற்றுகை, போராட்டம் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக வரிந்துகட்டுகின்றன திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்...
இது தொடர்பான விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
'நான் அப்படித்தான் பேசுவேன்...' - ஆளுநரின் தொடரும் சர்ச்சைப் பேச்சுகள்! - முழுத் தொகுப்பு
"திமுக அரசுக்கு ஆளுநரைக் கையாளத் தெரியவில்லை!"
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவியேற்றது முதலே சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி புயலைக் கிளப்பியிருக்கிறார் தமிழக ஆளுநர்.
அதற்குத் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆளுநரின் சர்ச்சை பேச்சு தொடர்பாக அதிமுக-வின் விமர்சனம் உள்ளிட்ட விரிவான தகவலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
"இதோடு நிறுத்திக்கொள்ளாவிட்டால்..." -ஆளுநரை எச்சரிக்கும் சீமான் - விகடன் டிரெண்டிங் செய்திகள்...
"தேர்தல் அரசியலிலிருந்து விலகுகிறேன்'' - ஹெச்.ராஜா
ஆளுநர் பேச்சு - ஓ.பி.எஸ் கருத்துக் கூற மறுப்பு
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்!
"இதை தூத்துக்குடியில் ஆளுநர் பேசுவாரா?" - உதயநிதி
விகடன் ட்ரெண்டிங் செய்தியில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
உயர்ந்த வழிகாட்டி மதிப்பு: நடுத்தர மக்கள் இனி வீடுவாங்க முடியாதா?
தமிழகத்தில் நிலம், மனைகளின் வழிகாட்டி மதிப்பு 33% உயர்த்தப்படும் என்றும், பத்திரப்பதிவு கட்டணம் 2% குறைக்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
ஆனால், பல இடங்களில் 50% வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது, வீடு வாங்கத் திட்டமிட்டிருக்கும் சாதாரண மக்களை கடும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
இதனால் வீடு வாங்கும் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
இது குறித்த விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
உணவு ஒவ்வாமை... அசௌகரியம்... என்ன வித்தியாசம்?
உணவு பற்றி நாம் கட்டாயம் பேச வேண்டிய இன்னொரு விஷயம் ஒவ்வாமை. நம்மில் பலரும் 'இது ஒத்துக்காது', 'அது ஒத்துக்காது', 'இது சாப்பிட்டால் காய்ச்சல் வரும்', 'அது எடுத்துக்கொண்டால் சளிப்பிடிக்கும்' என்றெல்லாம் பெரிய லிஸ்ட்டே வைத்திருப்போம்.
இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, Food Allergy எனப்படும் உணவு ஒவ்வாமை. இரண்டாவது, Food Intolerance. இதை ஒவ்வாமை என்று கூறாமல் அசௌகரியம் என்று கூறுவதே சரி.
இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை இந்த வார ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் ' ஆரோக்கியம் ஒரு பிளேட்' தொடரில் விவரிக்கிறார் டாக்டர் அருண்குமார்...
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
ஆன்லைன் லோன் ஆப்களுக்கு கூகுள் கிடுக்குபிடி..! - மோசடிகள் இனியாவது குறையுமா?
நமது ஆண்ட்ராய்டு மொபைல்களில் இருக்கும் சமூக வலைதளங்கள், விளையாட்டு ஆப்கள், பொழுதுபோக்கு ஆப்கள்... என அனைத்து ஆப்களுக்கும் தொடக்கப்புள்ளியே கூகுள் ப்ளே ஸ்டோர் தான்.
சில நேரங்களில் இந்த தொடக்கப்புள்ளியே, பலரது உயிரை பறிக்கும் முற்றுப்புள்ளியாக மாறி வருகிறது.
இந்த நிலையில்தான், லோன் ஆப்களுக்கு கிடுக்குப்பிடி போடும் விதமாக இந்த விஷயத்தில் கூகுள் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
'விடுதலை' படம் நினைவூட்டும் கலியபெருமாள், தமிழரசனின் உண்மைக் கதை!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'விடுதலை' திரைப்படத்தின் கதை பற்றியும், அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் பற்றியும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.
'பெருமாள்' வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். தமிழ்நாடடில் 1980-களில் பரபரப்பாக செய்திகளில் அடிபட்ட பெயர், புலவர் கு.கலியபெருமாள். அவர் தான், அந்த பெருமாள் வாத்தியர் கதாபாத்திரம் என்கிறார்கள்.
இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
சினிமா விமர்சனம்: August 16 1947
சுதந்திரம் கிடைக்கப்போவதையே ஒரு கிராமத்தினரிடம் இருந்து மறைப்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன். அதைத் தாண்டி, செங்காடு எனும் கிராமம், அதன் நிலவியல் அமைப்பு என சில விஷயங்கள் மட்டுமே முதற்பாதியைக் காத்து நிற்கின்றன.
நிதானத்தையும் விறுவிறுப்பையும் கலந்து திரைக்கதை அமைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமார்.
கதாநாயகன் கௌதம் கார்த்திக், 'பரமன்' என்ற சேட்டைக்கார இளைஞனின் பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
கதாநாயகியான அறிமுக நடிகை ரேவதி கொடுத்த பணியை நிறைவாய் செய்திருக்கிறார்.
விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
from விகடன்
umn news
