Vijay: அவர மகததல சரபப கறயவ இலல!' வஜய கலவ வரத வழஙகம வழ தகபபளர கறபகம

0

2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார். கற்பகம் கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த நிகழ்வினை தொகுத்து வழங்கியவர் கற்பகம். பாண்டிச்சேரியைச் சேர்ந்த இவர்தான் அந்த நிகழ்வின் தொகுப்பாளர். அவரிடம் பேசினோம். Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள் "நான் முழு நேரமா எம்சி பண்ணிட்டு இருக்கேன். தவிர, நாங்க பாண்டிச்சேரியில் ஒரு யூடியூப் சேனலும் நடத்திட்டு வர்றோம். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழாவிற்கு புஸ்ஸி ஆனந்த் சார் தான் என்னை பரிந்துரை பண்ணியிருக்கார். அவர் மூலமாகத்தான் அந்த நிகழ்வினைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. நம்ம எல்லோரும் ஆடியோ லான்ச்லதான் அவர் பேசுறதைப் பார்த்திருக்கோம். நானும் டிடி அக்கா, மிர்ச்சி விஜய் எல்லாம் தொகுத்து வழங்கிப் பார்த்திருக்கேன். ஆனா, நம்மளும் ஒரு நாள் அந்த இடத்துல நின்னு அவருக்கு ஹோஸ்ட் பண்ணுவோம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. இதே மாதிரி நாமளும் ஹோஸ்ட் பண்ணனுங்கிற ஆசை இருந்ததே தவிர நாம பண்ணிடுவோம்னுலாம் நான் நினைக்கவே இல்ல. நீங்க தான் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போறீங்கன்னு சொன்னதும் ரொம்ப ஆர்வமா இருந்தது. அதே மாதிரி ரொம்ப பொறுப்புணர்வும் இருந்தது. இந்த ஈவென்ட்டை நல்ல படியா பண்ணிடணும்னு நினைச்சேன். இந்த அளவுக்கு வேர்ல்டே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு இந்த நிகழ்ச்சி இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்ல.  Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள் ஈவென்ட்டிற்கு முன்னாடியும் நான் விஜய் சாரை மீட் பண்ணல. ஈவென்டுக்கு அப்புறமும் நான் மீட் பண்ணல. அன்னைக்கு எல்லாரும் பார்க்கும்போதுதான் நானும் பார்த்தேன். புஸ்ஸி ஆனந்த் சார், `நீங்க நல்லா பண்ணியிருந்தீங்கம்மான்னு!' வாழ்த்தினாங்க. ஆனா, தளபதி சாரை மீட் பண்ணுறதுக்கான வாய்ப்பு கிடைக்கல. புஸ்ஸி ஆனந்த் சார்கிட்ட கேட்டா கண்டிப்பா மீட் பண்ணக் கூட்டிட்டுப் போவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. சார் என்ன சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. மேடையில் அவருடன் பேசுறதுக்கான வாய்ப்பு கிடைக்கல. ஒரு ரெண்டு, மூணு முறை ஐ கான்டேக்ட் மட்டும் இருந்தது. வந்ததும் ஒரு ஸ்மைல் பண்ணி வணக்கம் சொன்னார். நானும் திருப்பி சொன்னேன். குட்டி, குட்டி விஷயங்கள் தான் அங்க நடந்தது. அதுதவிர்த்து பேசுறதுக்கான சந்தர்ப்பமெல்லாம் கிடைக்கல. விஜய் காலைல10.45 கிட்ட ஈவண்ட் ஸ்டார்ட் பண்ணினாங்க. நைட் 12.30 வரைக்குமே போச்சு. நிகழ்ச்சி முடியுற வரைக்குமே நின்னுட்டே தான் இருந்தார். இடையில் 5,10 நிமிஷம் தான் பிரேக் இருந்துச்சு. 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்தார். மூணு தடவை அந்த மாதிரி பிரேக் கிடைச்சது.  ஐந்து பேர் ஃபேமிலியில் வந்தாலும் அவ்வளவு பொறுமையா அவங்க சொல்றதெல்லாம் கேட்டு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்தா நாம எப்படி அவங்களைப் பார்த்துப்போமோ அப்படித்தான் அவர் எல்லாரையும் பார்த்துக்கிட்டார். ஒரு நடிகர் என்பதைத் தாண்டி நம்மள பார்க்கிறதுக்காகத்தான் வந்திருக்காங்க அப்படின்னு அவங்க என்ன பண்ண சொல்லிக் கேட்குறாங்களோ அது எல்லாத்தையும் முகம் சுளிக்காம பண்ணினார். நான் என்ட்ரியில் எப்படி அவரைச் சிரிச்ச முகத்தோட பார்த்தேனோ திரும்ப ஈவண்ட் முடிஞ்சு அவர் கிளம்புற வரைக்குமே அதே சிரிப்போட தான் இருந்தார். அவர் முகத்துல சிரிப்பு குறையவே இல்ல. விஜய் கல்வி விருதுகள் எல்லாரையும் தன்னோட தம்பி, என்னோட தங்கச்சினு தான் பார்த்தார். நீங்க கவனிச்சிருந்தா தெரியும்... அவர் சும்மா ஃபோட்டோவுக்குக் கை கட்டி போஸ் கொடுத்திருக்க மாட்டார். எல்லார் தோள் மேலேயும் கை போட்டு உரிமையா ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்திருப்பார். அவங்க எல்லாரும் என்னென்ன கேட்டாங்களோ அதெல்லாம் பண்ணிக் கொடுத்தார். எனக்கு இது லைஃப்டைம் மொமண்ட் தான். எந்தவொரு ஈவென்ட்னாலும் இது நம்மளுடைய முதல் ஈவென்ட் இதை நல்லா பண்ணனுங்கிற எண்ணத்தோட தான் பண்ணுவேன். நானே என்னை கிள்ளிப் பார்த்துக்கிறேன் நாம தான் இந்த ஈவென்ட் பண்ணோமான்னுலாம்.. இது போதும் எனக்கு... வேற என்ன வேணும் அப்படிங்கிற மாதிரி சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு. View this post on Instagram A post shared by Cinema Vikatan (@cinemavikatan) சீக்கிரமே அவரை சந்திச்சு அவர்கிட்ட பேசணும்.. அதே மாதிரி அன்னைக்கு அவர் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்க முடியல. அதனால, அதுவும் எடுக்கணும். ஒர்க்கிங் ஸ்டில் இருக்கு அது ஹாப்பியாகத்தான் இருக்கு... ஆனாலும், அவர் கூட தனியா ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும்!' எனப் புன்னகைத்தார். from விகடன் Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*