Serial Update: பிக் பாஸ் தினேஷுக்குப் பதிலாக இவர்; மீண்டும் ஃபார்முக்கு வரும் `எதிர்நீச்சல்' தொடர்!

0

* விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் 'கிழக்கு வாசல்'. 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் ஒன்லைன்தான் இந்தத் தொடர். எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா, வெங்கட், அருண், அஷ்வினி என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடரில் கதாநாயகியான ரேஷ்மாவைத் திருமணம் செய்யப் போகிற மாப்பிள்ளையாக நடித்திருந்தார் நடிகர் தினேஷ்.

தினேஷூக்கு பதிலாக நடிக்கும் சசிந்தர்

தற்போது அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்திருப்பதால் அவருடைய கேரக்டர் மாற்றப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக 'தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரில் நடித்திருந்த சசிந்தர் நடிக்கிறார்.

* மக்களிடையே ஆரம்பத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நெடுந்தொடர் ஈரமான ரோஜாவே சீசன் 2. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கேப்ரில்லா இந்தத் தொடரின் இரண்டு நாயகிகளில் ஒருவராக கமிட் ஆனார். திரவியம், ஸ்வாதி, சித்தார்த் என அனைத்து லீட்களுக்கும் ஸ்ட்ராங் ஆன ரசிகர்கள் பின்புலம் இருந்தது.

ஈரமான ரோஜாவே சீசன் 2

இந்தத் தொடரை தாய் செல்வம் இயக்கி வந்தார். அவர் மறைவுக்குப் பிறகு ராஜ சுந்தரம் அந்தத் தொடரை இயக்கினார். 502 எபிசோடுகள் ஓடி, தற்போது அந்தத் தொடர் நிறைவடைந்திருக்கிறது. தொய்வான கதை ஓட்டமும் இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. 

* 'எதிர்நீச்சல்' கதைக்களம் குறித்து சமூகவலைதள பக்கங்களில் பல்வேறு விதமான கமென்ட்கள் பகிரப்பட்டு வந்தன. வேல ராமமூர்த்தி ஒரு வழியாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டார். ஆடியன்ஸூம் அவரை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

`எதிர்நீச்சல்'

நேற்றைய எபிசோடில் ஆதிரை கதாபாத்திரம் காட்டப்பட்ட விதத்திற்குப் பல்வேறு பாராட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பலரும் 'இப்பதான் டிராக் சரியா போகுது... இதை அப்படியே கண்டின்யூ பண்ணுங்க டைரக்டர்!' எனப் பதிவிட்டு வருகிறார்கள். 



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*