
* மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில், ரச்சிதா மகாலட்சுமி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உங்களுக்கு அடிப்படையான விஷயங்கள் தேவைப்பட்டால் உங்களது இடத்தை குறிப்பிடுங்கள்.
நாங்கள் உங்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்கிறோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'ரச்சிதா மகாலட்சுமி அறம் டிரஸ்ட்' என்கிற பெயரில் இத்தகைய உதவிகளை செய்யத் தொடங்கி இருக்கிறார்.
* மக்கள் புயலின் தாக்கத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். நான் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு நிச்சயம் செய்ய வேண்டும் எனக் களத்தில் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் கலா.
உணவு, பால் பாக்கெட் என பிறரிடம் இருந்து கிடைத்த உதவியையும் குறிப்பிட்டு உதவிக் கொண்டிருக்கிறார். அது குறித்த வீடியோக்களை கலா அவருடைய சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
* 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'இலக்கியா' உட்பட பல தொடர்கள் எடுக்கப்பட்ட இடம் ஏ.ஆர்.எஸ்.கார்டன். அந்த ஸ்டுடியோவினுள் கோர்ட் செட்டப், போலீஸ் செட்டப், கோயில் செட்டப் உட்பட பல செட்கள் இருக்கின்றன. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கதிர் - முல்லை தனியாகக் குடியேறும் வீடும் இந்த ஸ்டுடியோவினுள்தான் இருக்கிறது.
தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஸ்டுடியோ முழுவதுமாக நீரில் மூழ்கி தன் இயல்பில் இல்லாமல் இருக்கிறது. எப்படியும் நீரை வெளியேற்றி அனைத்தையும் சரிசெய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வர 10, 15 நாள்களுக்கு மேல் ஆகும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
from விகடன்
Umn news
