
`ராஜா ராணி' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு இதே தொடரின் மூலம் என்ட்ரியானவர் சஞ்சீவ். இந்தத் தொடரில் நடிக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்களுடைய திருமணத்திற்கு ஆல்யா மானசாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. சஞ்சீவ் குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது ஆல்யா மானசா, சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `இனியா' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே போல, சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `கயல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபமாக ஆல்யாவும் சஞ்வீவும் பிரிந்திருப்பதாக சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இருவரும் தொடர்ந்து அவர்களுடைய யூடியூப் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவ் ஆகவே இருந்து கொண்டிருந்தார்கள்.
தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆல்யா மானசா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,
`வதந்திகள் எப்போதும் நம் விஷயத்தில் வதந்திகள் மட்டுமே' எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும், `விவாகரத்தா? எங்களுக்கா? நெவர்!' எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
from விகடன்
Umn news
