Sindhu Bhairavi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் இன்ஸ்டா வீடியோ; மௌனம் காக்கும் ஆர்த்தி; பின்னணி என்ன?

0

சீரியல் நடிகர், நடிகைகளிடையே காதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஜோடி சேர்வது தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் வழக்கமாக நடக்கிற ஒன்றுதான்.

சேத்தன் - தேவதர்ஷினி, போஸ் வெங்கட் - சோனியா, ராஜ்கமல் - லதா ராவ், செந்தில் - ஶ்ரீஜா என ஏகப்பட்ட ஜோடிகளை உதாரணம் சொல்லலாம்.

இந்தப் பட்டியலில் விரைவில் சேர இருக்கிறார்களோ என சீரியல் ரசிகர்களை நினைக்க வைத்துள்ளது 'சிந்து பைரவி' தொடரின் ஆர்த்தி சுபாஷின் சமீபத்திய சமூக ஊடக போஸ்ட்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மிஸ்டர் மனைவி' தொடரில் நடித்து வருகிறவர் பவன் ரவீந்திரன்.

கடந்த வாரம் வந்த இவரது பிறந்த நாளின்போது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து வீடியோ வெளியிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் ஆர்த்தி அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

'சிந்து பைரவி' ஆர்த்தி சுபாஷ்
ஆர்த்தி சுபாஷ்

ஆர்த்தி சன் டிவியில் 'பாண்டவர் இல்லம்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிந்து பைரவி' தொடரில் நடித்து வருகிறார்.

ஆர்த்தியின் வீடியோ வெளியானது முதல் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துச் சொல்லி, 'எப்போது திருமணம்' எனக் கேட்டு வருகின்றனர்.

ஆர்த்தியின் வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக டிவி ஆர்ட்டிஸ்டுகள் சிலருமே கூட ரியாக்ட் செய்து வருகின்றனர். பலரும் 'கியூட் கப்பிள்' என்றெல்லாம் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

ஆர்த்தி சுபாஷ்
ஆர்த்தி சுபாஷ்

ரசிகர்களின் கமென்டுகளுக்கு 'ஆமாம், நாங்க காதலிக்கிறோம்' என்றோ, 'இல்ல நாங்க ஃப்ரண்ட்ஸ்' என்றோ எந்தவிதமான ஒப்புதல் வாக்குமூலத்தையும் தராத ஆர்த்தி வந்து விழுந்த சில ஆர்ட்டின்களுக்கு மட்டும் பதில் ஆர்ட்டின் பறக்கவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*