"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

0

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நேரில் பார்த்​த​போது பிரமிப்​படைந்​தேன். அவருடன் பணி​யாற்​று​வது முதல் முறை என்​ப​தால், பதற்​றத்​தில் உறைந்​து​விடு​வேனோ என்று பயந்​தேன்.

ரஜினி - ஸ்ரேயா சரண்

அதனால் என்னை அவருக்கு அறி​முகப்​படுத்தி வைக்க ஷங்​கர் சாரிடம் கேட்​டுக் கொண்​டேன். அதைக் கேட்டு அவர் சிரித்​தார். ஷங்​கர் சார், ‘ரஜினி சாரைச் சந்​தி​யுங்​கள்’ என்று சொன்​னதைக் கேட்​டதும் ஆச்​சரியப்​பட்​டேன்.

அந்த நேரத்​தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்​கான ஒத்​தி​கை​யும் படப்பிடிப்​பும் நடந்து கொண்​டிருந்​தது. படப்​பிடிப்​பின்​போது, ரஜினி சார் என்னை இயல்​பாக உணர வைத்​தார்.

'ஏன் நீங்க நடிக்க வரணும்னு தான் முதல்ல கேட்டேன்.!' - லோகேஷ் கனகராஜ் குறித்து அனிருத்

என் நெருங்​கிய நண்​பரைப் போலவே என்​னிடம் பழகி​னார். அந்தப் படத்தில் மிக​வும் சுவாரஸ்​ய​மான மனிதர்​களு​டன் பணியாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது என் அதிர்​ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமை​யானவர்.

ரஜினி - ஸ்ரேயா சரண்

படப்​பிடிப்​புத் தளத்​துக்கு வரும்​போது, எல்​லோரை​யும் சமமாகத்தான் நடத்​து​வார். அவருடன் அந்​தப் படத்​தில் பணி​யாற்றியது எனக்கு சிறந்த அனுபவ​மாக இருந்​தது.

அவர் ஏற்​கெனவே சூப்​பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்​றுக்​கொண்டே இரு’ என்று அவர் எப்​போதும் என்னிடம் சொல்வார்" என்று பகிர்ந்திருக்கிறார்.

ஷூட்டிங், டப்பிங்கில் `பரபர’ ரஜினி... உண்மைக்கதையில் நடிக்கும் சூர்யா... சல்மான் கானுடன் நயன்தாரா!

from விகடன்
Umn news <a

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*