கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’.

இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆகஸ்ட்.8) நடைபெற்றது.

டாக்ஸிக் படத்தில் நயன்தாரா

இதில் கலந்துகொண்ட நயன்தாரா புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது குறித்து பேசியிருக்கிறார்.

“படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால் அதிலிருந்து நான் தள்ளியே இருக்கிறேன்.

ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு காரணம் யஷ் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வுக்கு வர யஷுடைய ஒரு போன் கால் எனக்கு போதுமானதாக இருந்தது என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ஷூட்டிங், டப்பிங்கில் `பரபர’ ரஜினி... உண்மைக்கதையில் நடிக்கும் சூர்யா... சல்மான் கானுடன் நயன்தாரா!

from விகடன்

Umn news <a