திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! - விரக்தியில் விபரீத முடிவெடுத்த காதல் தம்பதி

0

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாவைகுண்டம் (27). இவர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசூல்தாள் (25) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகாவைகுண்டம் நாகர்கோவிலில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிசெய்து வந்தார். இதனால் அவர்கள் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள பைத்துல்மால் நகரில் கடாத இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, குழந்தை பாக்கியம் வேண்டி பல கோயில்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று வந்துள்ளனர். ஆனாலும், அவர்களுக்கு குழந்தை குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்பதால், மிகவும் மன வேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் மகா வைகுண்டம் மற்றும் அவரது மனைவியும் நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தம்பதிகள் இருவரும் கட்டிலில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். இதுகுறித்து கோட்டாறு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

Also Read: நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முன் நடந்தது என்ன?- கைதான ஹேமந்த் அளித்த அதிர்ச்சித் தகவல்

கோட்டாறு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தம்பதியினரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

இதுகுறித்து கோட்டாறு போலீஸார் கூறுகையில், ``காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் இறந்தது கிடந்த கட்டில் அருகே விஷ பாட்டில் கிடந்தது. எனவே, அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு பிரச்னைகள் எதாவது உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3aj5GRs
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*