கரூர்: `எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்!' - செந்தில் பாலாஜி காட்டம்

0

பழ"தமிழக முதல்வர், சுயமாக செயல்படக்கூடியவர் அல்ல. எல்லா விசயங்களிலும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கை, பேட்டிகளை அப்படியே காப்பியடித்து, அதை செயல்படுத்தும் ஜெராக்ஸ் முதல்வராக இருக்கிறார்" என்று செந்தில் பாலாஜி காட்டமாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

தி.மு.க நிகழ்ச்சி

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது, உப்பிடமங்கலம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி,

"கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சி நடந்தது. ஆனால், மக்கள் பிரதிகளான என்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ ராமரையோ, கரூர் எம்.பி ஜோதிமணியையோ அழைக்கவில்லை. அரசு விழாவுக்கு எங்களை அழைக்காமல், ஓர் அரசியல் கட்சி விழாபோல் முதல்வர் அதை நடத்தினார். 'எளிய முதலமைச்சர்'னு தன்னை அவர் சொல்லிக்கிறார். ஆனால், பொதுமக்களை ஏமாற்றும் பேர்வழியாக இருக்கும் ஒரு நபர் யாரென்றால், அது எடப்பாடிதான். காரணம், அவரை வரவேற்க தாரை, தப்பட்டை, மேளதாளங்கள், டான்ஸ் நிகழ்ச்சிகள்னு நடத்தினாங்க. ஆனால், 'எளிமையான முதலமைச்சர்' என்று மக்களிடம் நாடகம் நடத்திக்கிட்டு இருக்கிறார். முதல்வர், 'நீட் தேர்வை, தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தப்பதான், கொண்டு வந்தாங்க'னு சொல்லியிருக்கிறார்.

தி.மு.க நிகழ்ச்சியில் பேசும் செந்தில் பாலாஜி

ஆனால், அது தவறான கருத்து. 'எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்புகிறதோ, அந்த மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்வு. அதில் இருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும்''னு காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வை அமல்படுத்தப்பட்டபோது, தி.மு.க ஆட்சியில் இல்லை. எடப்பாடிதான் அப்போ முதலமைச்சராக இருந்தார். ஆனால், பழியை தி.மு.க பக்கம் தள்ளிவிடுகிறார். எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் முதல்வர். ஏனென்றால், இந்த அரசாங்கத்தை நடத்துவதே, அவர்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதே ஸ்டாலின்தான். கொரோனா பிரச்னை ஏற்பட்டபோது, 'சட்டமன்றத்தை ஒத்திவைக்கணும்'னு ஸ்டாலின் சொன்னார். ஆனால் முதல்வர், 'ஒத்திவைக்க முடியாது'னு சொன்னார். ஆனால், மூன்றே நாளில் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து, ஸ்டாலின் சொன்ன ஆலோசனைப்படி, சட்டமன்றத்தை ஒத்திவைத்தார்.

Also Read: கரூர்: `எனக்கு ஸ்டாலின் ஒன்றும் சான்று அளிக்க வேண்டியதில்லை!’ - முதல்வர் பழனிசாமி காட்டம்

நீட் தேர்வில் உள் உதுக்கீடு கொண்டுவந்தபோது, 'அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தி.மு.க செலுத்தும்'னு ஸ்டாலின் அறிக்கைவிட்டார். அதைப்பார்த்த எடப்பாடி அன்று மாலையே, 'அரசே மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தும்'னு சொன்னார். இப்படி, எல்லா விசயங்களிலும் ஸ்டாலின் சொல்லும் கருத்தை, ஆலோசனையை, அறிக்கையைதான் அப்படியே காப்பியடித்து செயல்படுத்தும், ஜெராக்ஸ் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 'கொரோனா ஊரடங்கு காலங்களில் சிறப்பா செயல்பட்டதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனால், மக்களின் கண்ணீரை துடைக்கவில்லை. இந்த காலத்தில் தி.மு.க தான் சிறப்பா செயல்பட்டது. அரிசி, மருந்து, மளிகை சாமான்கள், காய்கறிகள், உணவு பொட்டலங்கள் என்று சிறப்பா மக்களுக்கு உதவிகள் வழங்கினோம்.

செந்தில் பாலாஜி

ஆனால், அரசு ரேஷன் கார்டு ஒன்றுக்கு ரூ. 1000 த்தை வழங்கியது. ஆனால், ரூ. 150 வரை மின்கட்டணம் கட்டிக்கொண்டிருந்த வீடுகளுக்கு, ரூ. 1,500 மின்கட்டணம் வந்தது. ரூ. 50 வரை கட்டியவர்களுக்கு, ரூ. 850, 900னு வந்தது. அதேபோல், கொரோனாவையை பயன்படுத்தி, உணவில் ஊழல், மருந்து வாங்குவதில் ஊழல்னு இந்த அரசு செயல்பட்டிருக்கு. அதேபோல், போக்குவரத்துத்துறையிலும் ஏகப்பட்ட ஊழல். பேருந்துகளுக்கு ஓளிரும் பட்டைகள் ஒட்ட ரூ. 200 மட்டுமே கட்டணம் இருந்தது. அதை ரூ. 1,400 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். வேககட்டுப்பாட்டு கருவி பொருத்த ரூ. 900 மட்டும் இருந்ததை, ரூ. 2,500 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். அதுவும், அவர்கள் சொல்லும் நிறுவனங்களில் தான் ஸ்டிக்கரை ஒட்டணும், அவர்கள் சொல்லும் கம்பெனிகளில் தான் வேககட்டுப்பாட்டு கருவி வாங்கணும்னு நிர்பந்திக்குறாங்க.

இதனால் கோபமான லாரி உரிமையாளர்கள், 'ரூ. 2,300 கோடி ரூபாய் ஊழல்'னு சொல்றாங்க. 'ஜி.பி.எஸ் கருவி பொருத்துவதில் ரூ. 1000 கோடி ஊழல்'னு சொல்றாங்க. ஆனால், இதில் தவறு செய்த அமைச்சரை கண்டிக்கவில்லை முதல்வர். அதனால், இந்த ஊழலில் முதல்வருக்கும் பங்கிருக்கிறது என்றே தெரிகிறது. அதேபோல், 'கரூர் பேருந்து நிலையம் விசயத்தில், 'ஒருவர் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு சென்றிருக்கிறார்' என்று சொல்லியிருக்கிறார். அந்த ஒருவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்கலாம். நீதிமன்றமே, '22 மாதங்களில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்' என்று உத்தரவிட்ட திருமாநிலையூரில் அமைக்காமல், சம்பந்தமே இல்லாமல் பைபாஸ் அருகே அமைக்க முயல்கிறார்கள். ஜி.ஓவே போடப்படவில்லை. ஆனால், அங்கே பொக்லைன் வைத்து வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

தி.மு.க நிகழ்ச்சியில் பேசும் செந்தில் பாலாஜி

போக்குவரத்த்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவர் குடும்பத்தினரும் அங்கே நிலம் வாங்கி போட்டிருக்கிறார்கள். அதன் மதிப்பை உயர்த்தவே, அங்கே பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் துடிக்கிறார். அதேபோல், வேளாண் சட்ட மசோதாவை ஆதரிக்கும் எடப்பாடி, உண்மையில் ஒரு விவசாயியே கிடையாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டில் முறைகேடு இருப்பதாக நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதற்கும், 'தேர்தல் கமிஷன் வேலை அது. அதில் முறைகேடு இல்லை'னு சொல்லியிருக்கிறார். அதில் நடந்திருக்கும் முறைகேட்டை நீதிமன்றம் மூலம் நிரூபித்து, அ.தி.மு.கவின் பித்தலாட்டத்தை மக்கள் முன்பு அம்பலப்படுத்துவோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mxdBgo
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*