புதுச்சேரி: `மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்!’ - வேளாண் சட்ட நகலை கிழித்த நாராயணசாமி

0

மத்திய பி.ஜே.பி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கடந்த 22 நாள்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்

அதனடிப்படையில் அவர்களுக்கு ஆதரவாக ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காலையில் தொடங்கிய போராட்டம் மாலை நிறைவடைந்தது. அதற்கு முன்பாக உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு தொடர்பாகவும் விமர்சித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மதச்சார்பற்ற அணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை. மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து புதுச்சேரியை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக பறித்து வருகிறது. புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரை மோடி இரண்டாக உடைத்து யூனியன் பிரதேசமாக்கினார்.

Also Read: புதுச்சேரி: `திருமாவளவனின் முழுப் பேச்சையும் கேட்க வேண்டும்!’ - முதல்வர் நாராயணசாமி

அதேபோல் புதுச்சேரி மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும். மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். அப்போது திடீரென மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3h1GQqx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*