தேனி: முதியவர் மர்ம மரணம்... பிரேத பரிசோதனையால் சிக்கிய இளைஞர்!

0

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் வசித்துவந்த பொன்ராம் (வயது 75) என்ற முதியவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவ்வரது வீட்டுப் படுக்கையறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், யாரோ ஒருவர் தனது தந்தையை கொலை செய்திருக்கலாம் எனக் கூறி, தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கொலை செய்யப்பட்ட முதியவர்.

புகாரைப் பதிவு செய்த தேவதானப்பட்டி போலீஸார், விசாரணையில் இறங்கினார். அதே நேரத்தில், பொன்ராமின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேதபரிசோதனை அறிக்கையில், முதியவர் பொன்ராம், கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அதனை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய தேவதானப்பட்டி போலீஸார், பொன்ராமின் வீட்டிற்கு அடிக்கடி வரும் அருண்குமார் (வயது 26) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து விசாரித்ததில், அவர் கூறிய தகவலால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

முதியவரின் வீட்டின் அருகே விசாரணை செய்யும் போலீஸார்.

அருண்குமாரும், அவரது நண்பர் ஒருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்ததும், அந்த நண்பருக்கு திருமணம் ஆனதால், பொன்ராமிடம் அருண்குமார் பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று, இரவு, குடிபோதையில் பொன்ராம் வீட்டிற்கு வந்துள்ளார் அருண்குமார். அப்போது பொன்ராமிடம் ஓரினச்சேர்க்கை செய்ய முயலவே, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து, பொன்ராமின் கழுத்தை நெருத்திக் கொலை செய்ததாதகவும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார் அருண்குமார். அதனைத்தொடர்ந்து, அருண்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். முதியவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mA70lx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*