திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை பள்ளகனியூரைச் சேர்ந்தவர் 34 வயதுடைய ரவி, கூலித்தொழில் செய்கிறார். இவரது மனைவி சோபியாவுக்கு 24 வயதாகிறது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்த நிலையில், சோபியாவுக்கும் அத்தனாவூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளாக திருமணம் தாண்டிய நட்பு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
நாளடைவில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரவே ஆத்திரமடைந்த ரவி மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டுள்ளார். இந்த நிலையில், சோபியா தனது மகனுடன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ரவி புகாரளித்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை ரவீந்திரன் கடத்திச்சென்றுவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுபோன்று ரவீந்திரன்மீது அவரது மனைவி சங்கீதாவும் மேலும் ஒரு புகாரளித்துள்ளார்.
‘‘தனது கணவர் பீரோவில் வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு காதலி சோபியாவுடன் சென்றுவிட்டார். தனது கணவரைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக, ஏலகிரி மலை போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3nxeTJR
via
