`பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்கள் ஏன்?’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

0

மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த பொதுநல மனுவில், "தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக உள்ள பொது சாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன. பேரிகார்டுகள் மூலம் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. அதே போல் பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.

பேரிகார்டு தொடர்பான வழக்கு

இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும் எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, `தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன?, சாலைகளில் உள்ள பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை ஏன் வைக்கப்படுகின்றன?’ என கேள்வி எழுப்பினர்.

hc

தொடர்ந்து, `அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/343Onjn
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*