வேலூர்: பயிர் செய்யவிடாமல் தடுக்கும் வழக்கறிஞர்! - தீக்குளிக்க முயன்ற விவசாயி

0

வேலூர் மாவட்டம், பொன்னை எஸ்.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கேசவன் (68). இவருடைய மனைவி நாகம்மாள் (66). இவர்களும், அதே பகுதியைச் சேர்ந்த பாலான் நாயுடு, கோதண்டன், ஸ்ரீநிவாஸ், பார்வதியம்மாள் ஆகிய ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் எஸ்.என்.பாளையம் கிராமத்தில் அருகருகிலுள்ள சுமார் நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார்கள். இந்த நிலத்துக்கு அவர்களிடம் பட்டா இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தீக்குளிக்க முயன்ற விவசாயி

இப்படியிருக்க நிலத்துக்கு அருகில் வசிக்கும் பிரசன்னகுமார் என்ற வழக்கறிஞர் தலைமையிலான நபர்கள் அந்த விவசாய நிலத்தை ஆக்கிரமிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பத்தினரும் கடந்த வெள்ளிக்கிழமை பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், வழக்கறிஞர் தலைமையிலான கும்பல், பயிர் செய்யவிடாமல் விவசாயிகளுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகளும் புகாரளிப்பதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அப்போது, விவசாயி கேசவன் வாட்டர் கேனில் மறைத்து எடுத்துவந்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். கலெக்டர் அலுவலக முகப்புப் பகுதியில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், விவசாயியைத் தடுத்து அவர்மீது தண்ணீரை ஊற்றினர்.

விவசாயியை மீட்ட போலீஸார்

மீட்கப்பட்ட விவசாயியும், அவருடைய மனைவியும் விசாரணைக்காக சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்களுடன் வந்திருந்த மற்ற விவசாயிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். விவசாய நிலத்தை அபகரிக்க முயலும் வழக்கறிஞர் தலைமையிலான கும்பல்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qUStUU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*