வேலூர்: `குவியும் புகார்கள்; சொத்து மதிப்புகள் ஆய்வு’ - ரெட்கிராஸ் செயலாளரை நெருக்கும் விசாரணைக்குழு

0

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் வேலூர் மாவட்டக் கிளையில், பெருமளவிலான நிதி முறைகேடாகக் கையாடல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அதன் நிர்வாகக்குழு சமீபத்தில் கூண்டோடு கலைக்கப்பட்டது. நிர்வாகக்குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களிடம், சப்-கலெக்டர் கணேஷ் தலைமையிலான விசாரணைக்குழு கிடுக்கிப்பிடியாகத் தீவிர விசாரணை நடத்திவருகிறது. ரெட்கிராஸ் செயலாளர் பொறுப்பை வகித்துவந்த இந்தர்நாத் இதில் முதன்மையானவராகக் கருதப்படுவதால், விசாரணைக்குழு முன்பு அவர் அடிக்கடி ஆஜராகி விளக்கமளித்துவருகிறார்.

இந்தர்நாத்

இந்தர்நாத்தின் சொத்து மதிப்புகளும் கடந்த காலங்களில் பலமடங்கு உயர்ந்திருப்பதும், விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. ரெட்கிராஸ் நிதியைக் கையாடல் செய்து சொந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தியிருப்பதாகவும் இந்தர்நாத் மீது குற்றம்சாட்டப்படுகிறது. சமீபத்தில், சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது,

அது மட்டுமன்றி, ரெட்கிராஸ் பணியாளர்களையும் மிரட்டி, தன்னுடைய தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய வைத்திருப்பதாகவும், அவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தன்னலமிக்க ரெட்கிராஸ் பொதுச்சேவையைக் களங்கப்படுத்தி, முழுக்க முழுக்க சுயநலத்துடன் செயல்பட்டிருப்பதாகவும் இந்தர்நாத் மீது புகார்கள் குவிந்துவருகின்றன.

இந்தர்நாத்

இந்தநிலையில், சப்-கலெக்டர் கணேஷ் முன்பு நேற்று மீண்டும் ஆஜரான இந்தர்நாத்திடம் விசாரணைக்குழு கடுமையான கேள்விகளை முன்வைத்தது. ரெட்கிராஸ் சொசைட்டியின் நிதியைப் பராமரிக்கும் மூன்று வங்கிக்கணக்குகளின் முழு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும் விசாரணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி, வங்கிக்கணக்கு விவரங்கள், காசோலை, வங்கிக் கணக்குப் புத்தகங்களை சப்-கலெக்டர் கணேஷிடம் இந்தர்நாத் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, இந்தர்நாத்தின் சொத்து மதிப்புகளையும், நிர்வாகக்குழுவில் இடம்பெற்றிருந்த 14 உறுப்பினர்களின் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்யவும் விசாரணைக்குழு நடவடிக்கை எடுத்துவருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/37HvRzr
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*