திருவண்ணாமலையில் நடைபெற்ற பிராயச்சித்த அபிஷேகம்... சுவாமி பாதத்துக்கு சிறப்பு அலங்காரம்!

0
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடியது திருவண்ணாமலை. இங்கு நேற்று அண்ணாமலையாருக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை

பிராயச்சித்த அபிஷேகம் எதற்கு?

திருக்கார்த்திகை பிரம்மோற்சவத்தின்போது அனைத்து வகையான பக்தர்கள் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீதும் ஏறுவார்கள். இங்கே சிவபெருமானே மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதிகம் என்பதால் பக்தர்களுக்குத் தெரியாமல் ஏதாவது தோஷம், தீட்டு ஏற்பட்டிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் முடிந்த பின் வரும் உத்திராடம் நட்சத்திர தினத்தில் திருதியை திதியில் பிராயச்சித்த அபிஷேகம் செய்வது வழக்கம்.

இதற்காக தீபத் திருவிழாவின்போது வீதி உலா எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கும் 2,668 அடி உயரமுள்ள மலைமீது இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கும் நேற்று அபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் சிவாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் வளர்த்து புனிதக் கலசத்தில் நீர் எடுத்துத் தந்தனர். அந்தப் புனிதக் கலசத்தைச் சுமந்து மிராசு விஜயகுமார் மற்றும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மலை உச்சிக்குச் சென்றன.

திருவண்ணாமலை

மலை உச்சியில் இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு நல்லெண்ணெய், பச்சரிசி மாவு, அபிஷேகப் பொடி, பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ,வாசனை திரவியங்கள், இவர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்பு அண்ணாமலையார் ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதக் கலசத்தில் இருந்து நீரை அண்ணாமலையார் பாதத்தில் அபிஷேகம் செய்தார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் திருவண்ணாமலைக்கே அபிஷேகம் செய்வதாக ஐதிகம். அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3nBLRZG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*