புதுச்சேரி: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான பிரசாரம்.. பா.ஜ.க-வினரை விரட்டிய கிராம மக்கள்!

0

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க தான் முதலில் துவக்கியுள்ளது. காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியின் கனகச்செட்டிகுளம் சுந்தர மூர்த்தி விநாயகர் கோவில் அருகிலிருந்து பிரசாரத்தை பா.ஜ.கவினர் நேற்று காலை துவக்கினார்கள்.

பிரசாரத்தில் பா.ஜ.கவினர்

"காண்போம் இனி நல்லாட்சி... காங்கிரஸ் இல்லா புதுச்சேரி" எனும் கோஷத்தை முன் நிறுத்தி மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா துவக்கி வைத்தார். பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் தினமும் 3 தொகுதிகள் என மினி வேனில் சென்று பிரசாரத்தில் பங்கேற்கின்றனர்.

Also Read: புதுச்சேரி: `மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்!’ - வேளாண் சட்ட நகலைக் கிழித்த நாராயணசாமி

திருபுவனை கிராமத்தில் பெரிய பேட் என்ற பகுதிக்கு பிரசார வாகனம் சென்ற போது அங்குள்ள இளைஞர்கள் அவர்களை விரட்டி அனுப்பினார்கள். தங்களது பகுதியில் பிரசாரம் செய்ய கூடாது, அமைதியாக செல்ல வேண்டும் என கூறி பா.ஜ.க-வினரை விரட்டியதோடு அவர்கள் கொண்டு வந்து பிரசார நோட்டீசை கிழித்து எறிந்தனர்.

பிரசார நோட்டீஸ் கிழிப்பு

மேலும் பா.ஜ.க தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்தனர். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நியாயப்படுத்தி பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்ததை கண்டித்து அவர்களை விரட்டியதுடன் வாகனத்தின் மீது கல்வீச முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி பா.ஜ.கவினரை பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து வெளியே அனுப்பினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mASkTc
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*