தஞ்சாவூரில், இரட்டை குழந்தைகளை, குரங்குகள் துாக்கி சென்ற விவகாரத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் கூண்டு அமைத்து குரங்குகளை பிடித்து வருகின்றனர். மேலும் குரங்கு குழந்தையினை தூக்கி செல்வதற்கு வாய்ப்பே இல்லை என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், மேல அலங்கம், கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் புவனேஸ்வரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
இந்நிலையில் வீட்டிற்குள் குழந்தைகளை படுக்க வைத்தது விட்டு புவனேஸ்வரி வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடந்த 13 -ம் தேதி மதியம் அளவில் குரங்குகள் கூட்டமாக அப்பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மேற்கூரையின் ஓட்டை பிரித்து இரண்டு குரங்குகள் வீட்டிற்குள் வந்ததுடன் தனி தனியாக ஒவ்வொரு குழந்தையை தூக்கி சென்றதாக கூறப்பட்டது.
பின்னர் குரங்குகள் ஒரு குழந்தையினை வீட்டின் மேற்கூரையிலும், மற்றொரு குழந்தையை அருகே உள்ள அகழியிலும் வீசி சென்றதில், அகழியில் வீசப்பட்டஒரு குழந்தை உயிரிழந்தது. மற்றொரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது. பிச்சிளம் குழந்தை இறப்பினை தாங்க முடியாத குழந்தையின் தாய் கதறியது இன்னும் அனைவரது காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியது.
Also Read: இரட்டை பச்சிளம் குழந்தைகள்; தூக்கிச் சென்ற குரங்குகள்! - தஞ்சையை பதறவைத்த குழந்தையின் மரணம்
இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் கோவிந்தராவ் குரங்களை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கூண்டுகள் வைத்து, குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கையில் நேற்று முதல் ஈடுப்பட்டனர்.
இதற்காக அமைக்கப்பட்ட கூண்டுகளில் 20 குரங்குகள் சிக்கியது. அதை பச்சமலை காட்டு பகுதியில் விட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில், குழந்தைகளை, குரங்குகள் துாக்கி செல்ல வாய்ப்பில்லை, வேறு எதோ சம்பவம் நடந்துள்ளதாக கூறுயது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட வனத்தறை அலுலவர் இளையராஜா கூறியதாவது, ``குழந்தைகளை குரங்கு துாக்கி சென்ற விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளேன். அதன்படி, நம் பகுதியில் உள்ள குரங்கு குட்டிகளின் எடை சுமார் 200 முதல் 500 கிராம் தான் இருக்கும்.
குட்டிகளை குரங்கு துாக்கி கொண்டு செல்லும் போது, குட்டியை தாய் குரங்கு பிடித்து இருக்காது. குட்டியே தாயை இறுக்கமாக பிடித்து இருக்கும். இந்நிலையில், குரங்கள் துாக்கி சென்றதாக கூறப்படும் குழந்தைகளின் எடை 2.5 கிலோ இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், குரங்கள் மேற்கூரை ஓட்டின் வழியாக உள்ளே இறங்கி குழந்தைகளை தூக்கி கொண்டு 3 அடி உயரமுள்ள சுவர் வழியாக ஏறி செல்ல வாய்ப்பு இல்லை.
அப்படி குரங்குகள் தான் குழந்தையை துாக்கி சென்றது என்றால், குழந்தைகளின் உடலில் சிறு காயங்கள் கூட இல்லை என்பதை டாக்டர்கள் பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இறந்த குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இது தொடர்பாக சீனியர்களிடம் பேசியதில், இது அரிதான விஷயம் என தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக மேலும் விசாரிக்கப்படும்” என்றார்.
இது குறித்து போலீஸார் ஒருவர் கூறியதாவது, ``குழந்தை விவகாரத்தில் முதற்கட்டமாக, குரங்குகள் குழந்தைகளை துாக்கி சென்றதாக,வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வனத்துறையினர் குரங்கு தூக்கி செல்ல வாயிப்பில்லை என கூறியுள்ளதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருப்பதால் வேறு கோணத்தில் விவசாரணையினை தொடங்கியுள்ளோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qp1RiX
via
