சிவகங்கை: பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிப்பு! - திருட்டு வழக்கில் சிக்கிய சினிமா ஹீரோ

0

`தேவகோட்டை காதல்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சீனிவாசன். இவர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக காரைக்குடி காவல் துறையால கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹீரோவாக நடித்த சீனு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த நாச்சுழியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி குழந்தையம்மாள், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காலை 6.30 மணியளவில் எப்போதும் போல நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அந்த சமயம் இருசக்கர வாகனத்தில் முககவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், குழந்தையம்மாள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து அவரை நிலை குலைய வைத்து சுமார் 5 பவுன் மதிப்புள்ள நகையை அவரிடம் இருந்து பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அதிகாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து குழந்தையம்மாள் உறவினருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காரைக்குடி டி.எஸ்.பி., அருண் உத்தரவின்பேரில் எஸ்.ஐ.,க்கள் பார்த்திபன், தவமணி காவலர்கள் சுரேஷ், தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். காரைக்குடி அதன் சுற்றுவட்டாரங்கள் என பல இடங்களில் சோதனை செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்ததில் மர்ம நபர்களின் அப்பகுதியில் சுற்றித் திரிந்து, பின்னர் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றது தெரியவந்தது. காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளிகள் தங்கியிருந்தை தனிப்படை உறுதி செய்தது.

ஹீரோ வாக நடித்த சீனு

பின்னர் குற்றவாளிகளில் ஒருவரான சீனிவசானை கைது செய்தனர். அவனிடம் விசாரணை செய்ததில் மற்றொரு குற்றவாளி குறித்து தகவல் கொடுத்ததை தொடர்ந்து அவனை இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கைது செய்தனர். குற்றவாளி சீனு என்ற சீனிவாசன் இயக்குநர் ஏ.ஆர்.கே என்பவர் எடுத்த ‘தேவகோட்டை காதல்’ படத்தில் சீனு என்ற நடித்த நடிகர் என்று தெரியவந்தது. படத்தில் ஹீரோவாக நடித்த சீனு நிஜத்தில் திருடான சிக்கியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bv4ZU0
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*