தி.மலை: `முட்டி போடு... மன்னிப்புக் கேளு!’ அரசுப் பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்

0

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே தங்களுக்குள் யார் `கெத்து’ என்பது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதலும் நடைபெற்று வந்திருக்கிறது. அதில் சீனியர் மாணவர்கள் தங்கள் கெத்து காட்ட முயற்சித்த இடத்தில்`தர்ம அடி’ வாங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரணியைச் சேர்ந்த மாணவர்கள் அதனைப் பார்த்து சிரித்திருக்கின்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள்

அதனால், ஆத்திரமடைந்த அடிவாங்கிய ஒல்லியான மாணவர் ஒருவர், எதிரணியைச் சேர்ந்த ஜூனியர் மாணவர் ஒருவரை பள்ளி மைதானத்தில் உள்ள குட்டிச்சுவர் அருகில் வைத்து சரமாரியாகத் தாக்குகிறார். அந்த ஒல்லியான மாணவர் குத்துச்சண்டை வீரர் போல தொடர்ந்து தாக்க, அடி வாங்கும் மாணவர் `எனக்கு தெரியாதுண்ணா’ என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் ஓடும் அந்த மாணவரை மீண்டும் பிடித்து `யாருன்னு சொல்லுடா’ என்று கேட்டு கொடூரமாகத் தாக்கியதுடன் முட்டிபோடச் சொல்லி மிரட்டுகிறார்.

அப்போது டி-ஷர்ட் அணிந்து அங்கு வந்த மற்றொரு மாணவர் ஒருவர் அவர்களை சமாதானப்படுத்துவது போல மீண்டும் குட்டிச்சுவர் அருகே அழைத்துச் செல்கிறார். அங்கு புதிதாக வந்த மாணவரும் ஜூனியர் மாணவரை முட்டிபோட வைத்து `யாரு அப்படி செய்தது?’ என்று கேட்டு கடுமையாகத் தாக்குகிறார். அத்துடன் தலைக்கு மேல் கும்பிட்டு மன்னிப்பும் கேட்க சொல்கிறார். அப்போது மீண்டும் களத்தில் இறங்கிய அந்த ஒல்லி மாணவர், `இப்போ கூட உன்னை அடிக்கனும்னு அடிக்கல. அவன் கிடைக்கல அதான் உன்னை அடிக்கறேன். எங்கிருந்தாலும் அவன் வந்தே ஆகனும்’ என்று சொல்லி மீண்டும் தாக்கிவிட்டு ஓடு என்கிறார்.

Also Read: பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட பலர்மீது கொலைவெறித் தாக்குதல்! - ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அடி வாங்கிய மாணவர் தன் சக மாணவர்களிடம் இந்த சம்பவத்தை கூற, பதிலுக்கு அவர்கள் மேற்கண்ட இரண்டு மாணவர்களையும் வழிமறித்துத் தாக்கி அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். சமூக வலைதளங்கில் வைரலாகிவரும் இந்த வீடியோ காட்சிகள் பெற்றோர்களை பதற வைக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uhZvVk
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*